V4UMEDIA
HomeNewsKollywoodகருமேகங்கள் கலைவதற்கு காரணம் தேடும் தங்கர்பச்சான்

கருமேகங்கள் கலைவதற்கு காரணம் தேடும் தங்கர்பச்சான்

உணர்வுபூர்வமான படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான தங்கர்பச்சான். இவர் 20 வருடங்களுக்கு முன்பு இயக்கிய அழகி படம் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்காத ஒரு இடம் பெற்றுள்ளது. அதன் பிறகு பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு என நல்ல படைப்புகளை கொடுத்த தங்கர்பச்சான், தற்போது தனது மகன் விஜித் பச்சானை ஹீரோவாக வைத்து டக்கு முக்கு திக்கு தாளம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக தயாராகி உள்ளது.

இந்த நிலையில் தற்போது தனது அடுத்த படத்துக்கான வேலைகளையும் துவங்கிவிட்டார் தங்கர்பச்சான். கருமேகங்கள் ஏன் கலைகின்றன என படத்திற்கு டைட்டில் வைத்துள்ளார் தங்கர்பச்சான். இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன் மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தை வீரசக்தி என்பவர் தயாரிக்கிறார் இந்த படத்தின் கதையை தங்கர்பச்சான் சொன்னதுமே கண்ணீர் விட்டு அழுது விட்டாராம் தயாரிப்பாளர் வீரசக்தி. இது தங்கர்பச்சானின் அழுத்தமான படைப்பாக, தமிழ் சினிமாவின் முக்கியமான ஒரு படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இந்த படத்திற்கு வைரமுத்து பாடல்களை எழுத ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். தங்கர்பச்சானுடன் ஜிவி பிரகாஷ் முதன் முறையாக இணையும் படம் இது. ஜூலை 25ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

Most Popular

Recent Comments