கமல் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் விக்ரம். கிட்டதட்ட 4 வருட இடைவெளி விட்டு கமலின் படம் வெளியாகிறது. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். விஜய்சேதுபதி பஹத் பாசில் காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.
வரும் ஜனவரி 3ஆம் தேதி இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் இதன் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கமல் பேசும்போது, இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி என சொன்னால் அவர் என்னிடம் இருந்து அன்னியப்பட்டு விடுவார். விக்ரம் மூன்றாம் பாகத்திற்கு இயக்குனர் அவரே. அதேபோல இந்தியன் 2வும் அடுத்தடுத்த எனது படங்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது.
இந்த படத்தில் படப்பிடிப்பு சமயத்தில் உழைத்ததை விட தற்போது தான் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். மேலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி கலைஞர் கருணாநிதி பிறந்த நாளில் அமைந்தது எதேச்சையான ஒன்று. அதேசமயம் எனது திரையுலக வாழ்க்கையை செதுக்கிக் கொள்வதில் கலைஞர் கருணாநிதி முக்கியமானவராக இருந்தார் என்று கூறியுள்ளார் கமல்.
அந்த வகையில் விக்ரம் படத்திற்கு அடுத்த பாகம் இருக்கிறது என்கிற ஒரு புது தகவலையும்ட் இந்தியன் 2 படம் கைவிடப்படவில்லை என்கிற ஒரு நல்ல தகவலையும் தனது ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார் கமல்.