பிரபல முன்னணி ஹீரோக்களை வைத்து மிகப்பெரிய படங்களை தயாரித்து வந்த நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ். ஆனால் கால மாற்றத்திற்கு ஏற்ப பட்ஜெட்டில் அதிகம் செலவழித்து அதை திருப்பி எடுப்பதற்கு சிரமப்படுவதை விட அளவான பட்ஜெட்டில் படம் எடுத்து அழகான லாபம் பார்க்க திட்டமிட்டு தங்களது பாதையையும் மாற்றியுள்ளனர்
அந்தவகையில் ஹிப்ஹாப் ஆதி நடித்த சிவகுமாரின் சபதம், அன்பறிவு என இரண்டு படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தற்போது அவரை வைத்து மூன்றாவது படத்தையும் தயாரிக்க இருக்கிறது.
இந்த படத்திற்கு வீரன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஏஆர் கே சரவணன் இயக்குகிறார். இந்த படத்தில் ஆதிரா ராஜ் என்பவர் கதாநாயகியாக நடிக்க காளி வெங்கட் முனிஸ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்
இன்று இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவக்க விழா பூஜையுடன் பொள்ளாச்சியில் நடைபெற்றது.
அதுமட்டுமல்ல கிராமத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக பொள்ளாச்சியில் நடத்தி முடித்துவிட்டு சென்னை திரும்ப படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த படத்தில் கதாநாயகனாக நடிப்பது மட்டுமின்றி இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதியே இசையும் அமைக்கிறார்.