கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கொரோனா முதல் அலை தீவிரமான பின்னர் படப்பிடிப்பு நடத்துவதில் பல நடைமுறை சிரமங்கள் ஏற்பட்டன. இதனால் புதிதாக படமெடுக்க வரும் இயக்குனர்கள் பலரும் காலத்திற்கு தகுந்தாற்போல் புதிய முயற்சிகளை மேற்கொண்டு படம் இயக்க துவங்கினார்கள்.
அந்த வகையில் தற்போது வெளியாக இருக்கும் விஷமக்காரன் திரைப்படம் ஒரு சாஃப்ட்வேர் மூலமாக உருவாகி இருக்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது..
இந்த படத்தில் கதையின் நாயகனாக நடித்து படத்தை இயக்கியுள்ள இயக்குனர் வி படத்தை தயாரிப்பதற்கு முன்பாக படத்திற்கான கதை திரைக்கதை பட்ஜெட் என அனைத்தையும் தீர்மானிக்கும் விதமாக ஹனிபிளிக்ஸ் ஒரு சாப்ட்வேரை உருவாக்கி அந்த சாப்ட்வேர் மூலமாக ஒரு படத்திற்கான கதையையும் பட்ஜெட்டையும் பெற்று அதை அப்படியே இம்மி பிசகாமல் நடைமுறைப்படுத்தி விஷமக்காரன் என்கிற படத்தை இயக்கி முடித்து விட்டார். வரும் மே 27ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் இந்த சாப்ட்வேரை இயக்குனர் மணிரத்னம், தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், நடிகர் பிரசாந்த் ஆகியோரின் முன்னிலையில் வெளியிட்டபோது, அதில் கலந்து கொண்ட பிரபலங்கள் இந்த சாப்ட்வேர் குறித்து தங்களது ஆச்சரியத்தை தெரிவித்ததுடன், தேவைப்பட்டால் நாங்களும் இதை பரிசோதனை செய்து பார்க்கிறோம் என்று ஆர்வம் காட்டி உள்ளார்கள்.
விஷமக்காரன் திரைப்படம் மேனிபுலேஷன் எனப்படும் மனிதர்களை தங்களுக்கு ஏற்ற வகையில் கையாளுதல் என்பதை மையப்படுத்தி உருவாகி உள்ளது. ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் விஷமக்காரன். இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளதுடன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக நடிகர் வி (விஜய் குப்புசாமி). அனிகா விக்ரமன் மற்றும் வலிமை புகழ் சைத்ரா ரெட்டி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்