சமீபகாலமாக தொடர் தோல்வி படங்களால் சோர்ந்து போயிருந்த விக்ரம் பிரபுவுக்கு சமீபத்தில் வெளியான டாணாக்காரன் திரைப்படத்தின் வெற்றி புத்துணர்ச்சி அளித்து இருக்கிறது. நடிப்பதற்கு வாய்ப்புள்ள வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்தால் விக்ரம் பிரபுவின் வளர்ச்சி இன்னும் அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்றே திரையுலகத்தை சேர்ந்த பலரும் கூறுகின்றனர்.
அந்தவகையில் அவரை நோக்கி நல்ல படைப்புகளை உருவாக்கி வைத்திருக்கும் இயக்குனர்களும் தங்களது பார்வையை திருப்பி உள்ளனர். தற்போது அப்படி விக்ரம் பிரபு நடிக்க உள்ள படம் தான் ரத்தமும் சதையும்.

அறிமுக இயக்குனர் ஹரேந்தர் பாலச்சந்தர் இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளன. அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது.




















