V4UMEDIA
HomeNewsKollywoodபெண்களுக்கான லைப் கோச்சிங் நிறுவனம் துவங்கிய கேஎஸ் ரவிக்குமார் மகள்

பெண்களுக்கான லைப் கோச்சிங் நிறுவனம் துவங்கிய கேஎஸ் ரவிக்குமார் மகள்

தமிழ் திரையுலகில் 90களில் இயக்குனராக அறிமுகமாகி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களையும் வைத்து படம் இயக்கியவர் என்கிற பெருமையைப் பெற்றவர் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார். ஆனால் அவரது வாரிசுகள் யாரும் தற்போது வரை இந்த கலை உலகில் பக்கம் வரவே இல்லை.

இந்த நிலையில் அவரது மகள் திருமதி மல்லிகா ரவிக்குமார் பெண்களுக்கான லைப் கோச்சிங் நிறுவனத்தை துவங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் நோக்கம் பெண்களுடைய மனதின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதாகும்.

இதற்கான துவக்க விழாவில் சத்யபாமா பல்கலைக்கழகத்தின் எம்.டி திருமதி மரியா ஜீனா ஜான்சன்., நேச்சுரல்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி C.K. குமாரவேல், இந்தியாவின் லைஃப் கோச்சிங் பயிற்சியாளர் புஜா புனீத் மற்றும் Successgyan India வின் நிறுவனர் சுரேந்திரன் ஜெயசேகர் ஆகியோர் இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.

இதுபற்றி இயக்குனர் கேஎஸ்.ரவிக்குமார் கூறும்போது, “இன்று ஒரு தந்தையாக எனது குழந்தை மல்லிகா ஒரு சிறந்த திறமையாளராக மாறியுள்ளதை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் என்னை விட புத்திசாலி. அவருடைய வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் அதை தெளிவாக நிரூபித்து வருகிறார்.

அவரது ஆரம்ப நாட்களில் மக்கள் அவரை அவரது பெயரால் அழைத்தார்கள் இப்போது என்னை மல்லிகாவின் தந்தை என்று அழைப்பதில் நான் பெருமைப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்

Most Popular

Recent Comments