ஏற்கனவே தர்மபிரபு படத்தில் எமதர்மன் ஆக நடித்திருந்த யோகிபாபு அடுத்ததாக பெரியாண்டவர் என்கிற படத்தில் சிவபெருமான் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் இந்த படத்தை இயக்குனர் ஆர் கண்ணன் தான் இயக்குகிறார் என்றும் சமீபத்தில் தான் ஒரு செய்தி வெளியானது.
இந்த தகவலை இயக்குனர் கண்ணனே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சிவபெருமான் பூலோகத்திற்கு வருவதாகவும் அங்கு ஒரு பெண்ணை சந்திப்பதாகவும் இவர்கள் இருவருக்கும் சமீபத்திய நாட்டு நடப்பு குறித்து நடைபெறும் உரையாடல்கள் தான் படத்தின் கதை என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சிவபெருமான் சந்திக்கப்போகும் அந்த பெண்ணாக நடிக்கவிருக்கும் நடிகை யார் என இப்போது கோலிவுட்டில் ஒரு பரபரப்பும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. அந்த கதாபாத்திரத்தில் ஒரு முன்னணி நடிகை நடிக்க போகிறாரா அல்லது புதுமுகம் நடிக்கப்போகிறாரா என இப்போதே ஆருடம் கூற ஆரம்பித்து விட்டார்கள்.
ஏற்கனவே ஆர் கண்ணன் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள காசேதான் கடவுளடா படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. அந்த படத்தில் பணியாற்றியபோது இருவருக்கும் ஏற்பட்ட புரிதல்தான் பெரியாண்டவர் படம் உருவாவதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.