தற்போது லத்தி படத்தில் நடித்துவரும் விஷால் அந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார். வினோத்குமார் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கும் இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி ரிலீசாகும் என்று தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதைத்தொடர்ந்து விஷால் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் மார்க் ஆண்டனி. சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் மிக முக்கியமான வேடத்தில் சொல்லப்போனால் வில்லனாக நடிக்கிறார் எஸ்ஜே சூர்யா.

இந்த படத்தின் கதாநாயகி யார் என்கிற சஸ்பென்ஸ் நிலவி வந்த நிலையில் ரிது வர்மா விஷாலுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் தான் இந்த ரிது வர்மா. இந்த படத்தை வினோத் குமார் என்பவர் தயாரிக்கிறார்.