விக்ரம் நடிப்பில் படப்பிடிப்பு முடிவடைந்தும், தயாரிப்பு நிலையிலும் உள்ள படங்கள் மூன்று. அதில் அஜய் ஞானமுத்து டைரக்ஷனில் உருவாகி உள்ள கோப்ரா, மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன், இவைதவிர நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் துவங்கப்பட்டு இன்னும் எப்போது வெளியாகும் என தெரியாத நிலைதான் இருந்துவருகிறது.

குறிப்பாக அஜய் ஞானமுத்து டைரக்ஷனில் உருவாகி வரும் கோப்ரா படப்பிடிப்பு முடிவடைந்து விட்டாலும் அதன் ரிலீஸ் தேதி குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகியாக கேஜிஎப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். வில்லனாக முக்கிய வேடத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளார். ஏற்கனவே இமைக்கா நொடிகள் படம் மூலம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற அஜய் ஞானமுத்து இந்தப் படத்திலும் அதை தக்க வைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.