பார்த்திபன் இயக்கத்தில் அடுத்ததாக வெளிவர இருக்கும் திரைப்படம் இரவின் நிழல்.. பார்த்திபன் என்றாலே புதுமை தான். ஒத்த செருப்பு படத்தில் ஒத்த ஆளாக மொத்தப்படத்தையும் தாங்கி நடித்து விருதுகளை தட்டிச் சென்றவர், தற்போது ஒரே ஷாட்டில் இந்த இரவின் நிழல் படத்தை இயக்கியுள்ளார்
இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியானது.
இந்த நிலையில் வரும் ஜூலை 5-ஆம் தேதி இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடத்த இருக்கிறார் பார்த்திபன்.
இதற்கான அழைப்பிதழ் நிறைய வித்தியாசமாக உருவாக்கப்பட்டு பிரபலங்கள் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது
குறிப்பாக இதில் கீ போர்டில் உள்ள கட்டைகளில் இந்த படத்தின் விழா குறித்த அனைத்து தகவல்களையும் குறிப்பிட்டு அதிலும் கூட தான் வித்தியாசமான இயக்குனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளார் பார்த்திபன்.