Home News Kollywood லவ் படப்பிடிப்பை முடித்த பரத்

லவ் படப்பிடிப்பை முடித்த பரத்

ஏற்கனவே தான் நடித்த சூப்பர் ஹிட்டான படத்தின் டைட்டிலை அப்படியே  ஆங்கிலத்தில் மாற்றி எடுக்கும்போது அதில் தானே நடித்த ஹீரோக்கள் யாராவது நடித்து இருக்கிறார்களா என்றால் இதற்குமுன் அப்படி யாரும் இல்லை.. ஆனால் அந்த சாதனையை தற்போது நடிகர் பரத் செய்துள்ளார்.

ஆம் காதல் என்கிற சூப்பர் ஹிட் படத்தில் நடித்தவர் தற்போது அவரது ஐம்பதாவது படமாக உருவாகியுள்ள லவ் என்கிற படத்தையும் நடித்து முடித்து விட்டார்.

தெலுங்கு மற்றும் மலையாளத்தில் இருந்து வெளியாகும் ஹிட் படங்களை அழகாக மொழிமாற்றம் செய்து தமிழுக்கு ஏற்றபடி வசனங்களை எழுதி ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் ஆர்பி பாலா இந்த படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ளார்.

வாணி போஜன் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் டேனியல் போப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்..