பொதுவாக தமிழ் திரையுலகில் நடிக்க தெரிந்த விதமாக புதிய கதாநாயகர்களை அறிமுகப்படுத்துவதிலும் அல்லது அதுவரை நடிப்பு என்னவென்றே தெரியாமல் நடித்துக்கொண்டிருக்கும் கதாநாயகர்களை நடிக்க தெரிந்தவர்களாக மாற்றும் இயக்குனர்கள் மிகச்சிலரே. அவர்களில் இயக்குனர்கள் பாலா, பிரபு சாலமன் ஆகியோர் முக்கியமானவர்கள்.
அப்படி மைனா படத்தில் விதார்த்துக்கும் கும்கி படத்தில் விக்ரம் பிரபுவுக்கும் அவர்களது திரையுலக பயணத்தில் சீரான பாதை போட்டுத் தந்தவர் இயக்குனர் பிரபுசாலமன்.
அதேசமயம் கடைசியாக அவர் இயக்கிய தொடரி. காடன் ஆகிய படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில் செம்பி என்கிற படத்தை இயக்கி வருகிறார் பிரபு சாலமன்.
இந்த படத்தில் கதாநாயகனாக நடிப்பது வேறுயாருமல்ல சின்னத்திரை புகழ் அஷ்வின் தான்.. 40 கதை கேட்டு தூங்கிவிட்டதாக ஒரு மேடையில் பேசினாரே அதே அஷ்வின் தான்..
அதேசமயம் பிரபு சாலமன் இயக்கத்தில் நடிப்பதால் நிச்சயமாக இந்த படத்தில் இவரது நடிப்பு திறமை வெளிப்படும் என எதிர்பார்க்கலாம் படம் ஹிட்டானால் அஷ்வினுக்கு திரையுலகின் வாசல் அகலம் ஆகவே திறக்கப்படும் என்றும் நம்பலாம்
மேலும் இந்தப்படத்தில் கோவை சரளா தொன்னோறு வயது முதிய பெண்மணியாக நடித்து வருகிறார். இவரது கதாபாத்திர போஸ்டரும் தற்போது வெளியாகியுள்ளது.