கார்த்தி நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் விருமன். ஏற்கனவே கார்த்தியை வைத்து கொம்பன் என்கிற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் முத்தையா தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.
முக்கிய வேடங்களில் நடிகர்கள் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ் இருவரும் ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தை கதைக்களமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இந்த படம் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட்டமாக வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் கார்த்தி நடித்த சுல்தான் வெளியான நிலையில் ஒரு வருடம் கழித்து இந்த விருமன் திரைக்கு வருகிறது