கடந்த சில வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் உருவாகி, பான் இந்தியா படமாக வெளியான கேஜிஎப் திரைப்படம் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த மாதம் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கேஜிஎப் 2 என்கிற பெயரில் வெளியானது.
முதல் பாகத்தைப் போல, சொல்லப்போனால் அதைவிட இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. வசூல் ரீதியாக கிட்டத்தட்ட ஆயிரம் கோடிகளை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ள இந்த படம் ரசிகர்களை தாண்டி சினிமா பிரபலங்களையும் இந்த கவர்ந்துள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தை பார்த்து ரசித்துள்ளார் இயக்குனர் ஷங்கர். இந்த படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினரை அவர் பாராட்டும் போது, “ கேஜிஎப் படத்தை பார்த்துவிட்டேன். கதை சொன்ன விதம் படத்தொகுப்பு ஆகியவை கட்டிங் எட்ஜ் ஸ்டைலில் இருப்பது அருமை. அதிலும் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் நடக்கும் காட்சிகளை இன்டர்கட் ஷாட்டில் காட்டி இருப்பது துணிச்சலான முடிவு.
இப்படத்தில் வசனங்களும் ஆக்ஷனும் மிகச் சிறப்பாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. யஷ் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். பெரியப்பா அனுபவத்தை கொடுத்ததற்கு நன்றி பிரசாந்த் நீல்.. இரண்டு மாஸ்டர்கள் அன்பறிவு பங்களிப்பு அபாரமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார் ஷங்கர்.
இதில் அவர் பெரியப்பா அனுபவம் என கூறியது எதை என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். ஆளுக்கு ஒரு கருத்தை சொல்வதற்கு கூட அர்த்தம் தெரியாமல் மற்றவர்களிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் நமக்கு தோன்றிய வகையில் யோசித்தபோது தென்னிந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக முதலில் உருவானவர் ஷங்கர். அதன்பிறகு வந்தவர் ராஜமௌலி. இவர்களுக்கு ஜூனியராக தற்போது பிரம்மாண்ட இயக்குனராக உருவாகி இருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் நீல்.
அந்த வகையில் பிரமாண்ட படங்களை இயக்குவதில் சீனியரான தன்னை பெரியப்பா என்றும் ராஜமௌலியை சித்தப்பா என்றும் ஷங்கர் உருவகப்படுத்திக் கொண்டு உள்ளார் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.