கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஜே கோபிநாத் என்பவர் இயக்கிய ஜீவி என்கிற படம் வெளியானது. 8 தோட்டாக்கள் படத்தில் நடித்த வெற்றி மற்றும் கருணாகரன், ரோகிணி, மைம் கோபி ஆகியோர் நடித்திருந்த இந்த படம் ஒரு சாதாரண படம் போலத்தான் வெளியானது. ஆனால் இந்தப்படத்தில் சொல்லப்பட்டிருந்த கதையும் அதை சொன்ன விதமும் இது சாதாரண படம் அல்ல அதை ரசிகர்களுக்கு உணர்த்தியது.
தொடர்பியல் விதியை மையப்படுத்தி சிறப்பான திரைக்கதையுடன் இந்த படத்தை உருவாக்கியிருந்தார் விஜே கோபிநாத். இந்த நிலையில் தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ஜீவி-2 என்கிற பெயரில் இயக்கியுள்ளார் விஜே கோபிநாத்.

தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன முதல் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் மைம் கோபி.
நடிகை ரோகிணியின் தம்பியாக நடித்திருந்த அவர் இடைவேளைக்குப்பின் என்ட்ரி கொடுத்து கதாநாயகனையும் அவரது நண்பரையும் நகைகள் காணாமல் போன விஷயத்தில் குறுக்கு விசாரணை செய்யும் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இரண்டாம் பாகத்திலும் அவருக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்து இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் தனக்கான காட்சிகளுக்கு டப்பிங் பேசி வருகிறார் மைம் கோபி.