சைத்தான், எமன், கொலைகாரன், திமிரு புடிச்சவன் என விஜய் ஆண்டனியின் படங்களின் தலைப்புகளை அதிரடியாக, கொஞ்சம் நெகட்டிவ் சாயல் கொண்டதாக வெளியாகி வந்தன. ஒருவேளை விஜய் ஆண்டனியின் படங்களுக்கு இனிமேல் இப்படித்தான் தலைப்புகள் இருக்குமோ என்கிற சந்தேகம் கூட ரசிகர்களுக்கு ஏற்பட்டது.
ஆனால் சமீப காலமாக அவரது பட டைட்டிலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது அந்தவகையில் தமிழரசன், மழை பிடிக்காத மனிதன், அக்னி சிறகுகள் என அழகிய தமிழ் பெயர்களில் அவரது படங்கள் உருவாகி வருகின்றன.

இந்த நிலையில் இன்னும் ஒருபடி மேலாக புராண காலத்து பெயர் போல தற்போது விஜய் ஆண்டனி நடிக்கும் படத்திற்கு வள்ளிமயில் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. கிராமத்து படமோ நகரத்து படமோ பக்கா கமர்சியல் பொழுதுபோக்கு படமாக தரும் இயக்குனர் சுசீந்திரனுடன் இந்த படத்தில் முதன் முறையாக இணைந்துள்ளார் விஜய் ஆண்டனி.

இவருடன் சத்யராஜ், பாரதிராஜா இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதாநாயகியாக ஃபரியா அப்துல்லா என்பவர் நடிக்க, புஷ்பா புகழ் தெலுங்கு நடிகர் சுனில் ஷெட்டி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்றும் ரெடின் கிங்ஸ்லி, தம்பிராமையா, அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
சுசீந்திரனின் ஆஸ்தான இசையமைப்பாளர் இமான் தான் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் பூஜையுடன் துவங்கியுள்ளது