V4UMEDIA
HomeNewsKollywoodஒசாகா சர்வதேச திரைப்பட விழாவில் ஆறு விருதுகளை அள்ளிய சூரரைப்போற்று

ஒசாகா சர்வதேச திரைப்பட விழாவில் ஆறு விருதுகளை அள்ளிய சூரரைப்போற்று

திரைப்படம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியானது. கொரோனா தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் நேரடியாக ஓடிடி தளத்திலேயே இந்த படம் வெளியானது. இதனால் அதிகப்படியான ரசிகர்களால் இந்த படம் பார்க்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதற்கு காரணம் உணர்ச்சிப்பூர்வமாக உருவாக்கப்பட்டிருந்த இந்த படத்தின் கதை. நிஜ வாழ்க்கையில் சாதித்த ஒரு மனிதரின் உண்மைகதை என்பதுதான்.

சொந்தமாக விமான நிறுவனம் துவக்கிய ஒருவரின் போராட்ட வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்த படம் ஏற்கனவே பல சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் ஒசாகா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட இந்தப் படம் பல்வேறு பிரிவுகளில் ஆறு விருதுகளை அள்ளியுள்ளது.

சிறந்த நடிகருக்காக சூர்யாவுக்கும் சிறந்த இயக்குனருக்காக சுதா கொங்கராவுக்கும் சிறந்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கும் சிறந்த தயாரிப்பு நிறுவனத்திற்காக 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கும் சிறந்த கலை இயக்குனராக ஜாக்கிக்கும் கடந்த 2020ஆம் வருடத்தின் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக சூரரைப்போற்று படத்திற்கும் என மொத்தம் ஆறு விருதுகளை இந்த படம் அள்ளி வந்துள்ளது.

Most Popular

Recent Comments