தெலுங்கு திரையுலகின் இளம் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டாவுக்கு தமிழிலும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதனால் அவர் நடிக்கும் தெலுங்கு படங்களை ஒரே நேரத்தில் தமிழிலும் தயாரிக்கிறார்கள். கூடவே சமந்தாவும் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்றால் கேட்கவா வேண்டும். அப்படி அவர்கள் இருவரையும் இணைத்து தெலுங்கின் பிரபல இயக்குனர் சிவா நிர்வாண என்பவர் புதிய படம் இயக்குகிறார் என்கிற அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. தற்போது இந்த படத்திற்கு குஷி என டைட்டில் வைத்துள்ளார்கள்.

இருபது வருடங்களுக்கு முன்பு விஜய் நடிப்பில் சூப்பர் ஹிட்டான குஷி படத்தின் டைட்டில் இந்த படத்திற்கு வைத்துள்ளதால் ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு கேசம் அப்துல் வகாப் என்பவர் இசையமைக்கிறார். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லால் நடிப்பில் வெளியான ஹிருதயம் என்ற படத்திற்கு ஹிட் பாடல்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்ல இந்த படம் வரும் டிசம்பர் இருபத்தி மூன்றாம் தேதி ரிலீஸ் ஆகும் என தற்போது வெளியீட்டு தேதியையும் அறிவித்து விட்டார்கள் அந்த வகையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ஆக இந்த படம் வெளியாக இருக்கிறது