தமிழில் ரன், சண்டக்கோழி, பையா என பிரமிக்க வைக்கும் ஆக்ஷன் படங்களை கொடுத்தவர் இயக்குனர் லிங்குசாமி. சண்டக்கோழி 2 படத்திற்கு பிறகு தற்போது தெலுங்கு இளம் முன்னணி ஹீரோ ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் தி வாரியர் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டியும் வில்லனாக நடிகர் ஆதியும் நடித்துள்ளனர். இந்த நிலையில் நாயகன் ராம் பொத்தினேனியின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இந்த படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசரின் மூலம் இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது தெரிகிறது.

அக்மார்க் போலீஸ் ஆக்ஷன் படமாக இந்த படம் உருவாகியுள்ளதை இந்தப்படத்தின் டீசர் அழகாக சொல்கிறது. தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்தப்படத்துக்கு தமிழிலும் நாயகன் ராம் பொத்தினேனியே டப்பிங் பேசியுள்ளார் என்பது, தமிழில் இந்த படத்தை அவர் எந்த அளவிற்கு எதிர்பார்க்கிறார் என்பதை சொல்லாமல் சொல்கிறது.















