வருடந்தோறும் பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழா சினிமா ரசிகர்கள் மத்தியிலும் திரையுலக பிரபலங்கள் மத்தியிலும் ரொம்பவே பிரசித்தம். நம்மூர் பிரபலங்கள் பலருக்கும் அந்த விழாவில் ஒரு பார்வையாளராகவாவது கலந்துகொள்ள வேண்டும் என்கிற விருப்பம் இருக்கும்.
படைப்பாளிகள் பலரும் தங்களுடைய படத்தை அங்கே திரையிட வேண்டும் விருது பெற வேண்டும் என்கிற ஆர்வமும் இருக்கும் ஆனால் இயக்குனர் பா ரஞ்சித் இதில் ஒருபடி மேலாக சென்று தான் இயக்கியுள்ள வேட்டுவம் என்கிற திரைப்படம் மற்றும் வெப்சீரிஸ் பட போஸ்டரை கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட இருக்கிறார்.
சாதாரண தமிழ் படத்தின் போஸ்டர் கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் வெளியிட இருப்பதற்கு காரணம் பிரபல ஹாலிவுட் பட தயாரிப்பு நிறுவனமான கோல்டன் ரேஷியோ ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தனது ரஞ்சித் தனது நீலம் புரடக்சன் தயாரிப்பு சார்பில் இந்த படத்தை தயாரித்துள்ளது தான்.
பரியேறும்பெருமாள் படத்திலிருந்து துவங்கப்பட்ட அவரது இந்த தயாரிப்பு பயணம் இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு, ரைட்டர், குதிரைவால், சார்பட்டா பரம்பரை, என தனித்துவமிக்க படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு கொடுத்திருக்கிறது. அடுத்து சேத்துமான், ஜெ.பேபி, பொம்மை நாயகி, நட்சத்திரம் நகர்கிறது, என அடுத்தடுத்த படங்கள் வெளியீட்டிற்கு தயாராக இருக்கின்றன.