நடிகர் ஆதி மிருகம் என்கிற படத்தின் மூலம் அறிமுகமாகி, ஈரம் என்கிற படத்தின் மூலம் ஒரு வெற்றிகரமான ஹீரோவாக ரசிகர்கள் மனதில் பதிந்தவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்கிய பிரபல இயக்குனர் ரவிராஜா பினிஷெட்டி என்பவரின் மகன் என்றாலும் அந்த பிரபலத்தை பயன்படுத்தாமல், அதேசமயம் தனது சொந்த மொழியான தெலுங்கிலும் மிகப் பெரிய முக்கியத்துவம் தராமல் தமிழில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்தார் ஆதி.
தன்னுடன் யாகவராயினும் நா காக்க மற்றும் மரகதநாணயம் ஆகிய படங்களில் நடித்த நிக்கி கல்ராணி உடன் ஆதிக்கு காதல் ஏற்பட்டு சமீபத்தில் அவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
வரும் 18-ம் தேதி இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது. தங்களது திருமணத்திற்காக நண்பர்கள் பிரபலங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்து வருகிறார்.
அந்த வகையில் ஐதராபாத்தில் தற்போது வினோத் டைரக்ஷனில் தான் நடித்து வரும் படப்பிடிப்பில் இருக்கும் அஜித்திடம் நேரில் சென்று திருமண அழைப்பு விடுத்திருக்கிறார் ஆதி.
பொதுவாகவே நடிகர் அஜித் எந்த ஒரு பொது நிகழ்வுகளிலும் மற்றும் திரையுலக பிரபலங்களின் திருமண நிகழ்வுகளிலும் கலந்து கொள்வது இல்லை. தவிர ஆதி அஜித்துடன் எந்த படத்திலும் இணைந்து நடித்ததில்லை. அதனால் இவரது திருமணத்திற்கு அஜித் வருவாரா என ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர் அஜித்தை சந்தித்த புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது.