V4UMEDIA
HomeNewsKollywoodஜுராசிக் பார்க் படத்தின் கடைசி பாகம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜுராசிக் பார்க் படத்தின் கடைசி பாகம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தொண்ணூறுகளின் குழந்தைகளை மகிழ்விக்க வந்த ஜுராசிக் பார்க் படங்களின் அடுத்தடுத்த பாகங்களை அவ்வளவு சுலபமாக மறந்துவிட முடியுமா ரசிகர்களை திகிலில் உறைய வைத்த அதேசமயம் மிகப்பெரிய உருவங்களை திரையில் கண்டுகளிக்க வைத்த ஜுராசிக் பார்க் படத்தின் கடைசி பாகம் ஏற்கனவே உருவாகி வந்த நிலையில், தற்போது ஜூன் 10ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது என்கிற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

ஜுராசிக் பார்க் படத்தின் இறுதி பாகம் இதுவே என்பதால் ஒரு பக்கம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி என்றாலும், இந்த இறுதி பாகம் எப்படி இருக்கும் என்பதை காண்பதற்கு எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

2015 வெளியான ஜூராசிக் பார்க் முந்தைய பாகத்தை இயக்கிய கோலின் டவேரா தான் இந்த படத்தை இயக்கியுள்ளார் இதற்கு முந்தைய பாகங்களில் வந்த மூன்று கதாபாத்திரங்கள் இந்த படத்திலும் தொடர்கின்றன என்பது ஹைலைட்.

Most Popular

Recent Comments