நடிகர் விஜய் முதன்முறையாக ஒரு நேரடி தெலுங்கு படத்தில் தற்போது நடித்து வருகிறார். தோழா படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குனர் வம்சி pபைடிப்பள்ளி தான் இந்த படத்தை இயக்கி வருகிறார். ராஷ்மிகா கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இவர்களை தவிர சரத்குமார், பிரபு, யோகி பாபு என மிகப்பெரிய நட்சத்திர கூட்டமே இந்த படத்தில் நடித்து வருகிறது.
இந்த நிலையில் நடிகர் சரத்குமார், மனோபாலா, பி.எல் தேனப்பன் ஆகியோர் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹாயாக அமர்ந்திருப்பது போன்று ஒரு புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியானது.
ஏற்கனவே சரத்குமார் இந்த படத்தில் நடிக்கிறார் என்பதாலும், அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று சொல்லப்பட்டு வருவதாலும், தற்போது மனோபாலாவும் இந்த படத்தில் இணைந்துள்ளார் என்றும் அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து தான் இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது என்றும் ஒரு செய்தி சோசியல் மீடியாவில் பரவ ஆரம்பித்தது.
இதனைக் கண்டு பதறிப்போன மனோபாலா உடனடியாக இது வேறு ஒரு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் நான் விஜய் படத்தில் நடிக்கவில்லை என்றும் விளக்கம் அளிக்கும் விதமாக ஒரு தகவலை பதிவிட்டு பரபரப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இருந்தாலும் விஜய் படத்தில் மனோபாலா நடிக்கவில்லை என்பது ஒரு வருத்தம்தான்.