சமீபகாலமாக விஜய் படங்களுக்கு அனிருத், ஜி.வி பிரகாஷ், இமான் ஆகியோர் தான் மாறி மாறி இசையமைத்து வந்தார்கள் மெர்சல், பிகில் ஆகிய படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்தார். ஒவ்வொரு படத்திலும் குறைந்தபட்சம் இரண்டு பாடல்களாவது சூப்பர் ஹிட்டாகி பல நாட்களுக்கு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தன.

சமீபத்தில் வெளியான பீஸ்ட் படத்தில் கூட அனிருத் இசையமைப்பில் வெளியான அரபிக்குத்து பாடல் இளசுகளை மட்டுமல்லாமல் குழந்தைகளையும் சேர்த்து வசீகரித்தது. எல்லோரும் தாங்களும் அரபிக்குத்துக்கு ஆட்டம் போடும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவேற்றி வந்தார்கள்.

இந்தநிலையில் தற்போது விஜய் முதன்முதலாக நேரடியாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கிறார். இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் இந்தப்படம் குடும்பப்பாங்கான படமாக உருவாகிறது.

இந்த நிலையில் தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் இசையமைப்பாளர் தமன் முதன்முதலாக இந்த படத்திற்கு இசை அமைப்பதன் மூலம் விஜய்யுடன் கை கோர்க்கிறார்.

ஏற்கனவே விஜய்க்காக இசையமைத்து வந்த இசையமைப்பாளர்கள் எப்படி சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து உள்ளார்கள் என்பது அவருக்கும் தெரியும் தானே..

இதை உணர்ந்து தானோ என்னவோ சமீபத்தில் அவர் கூறும்போது மாஸ்டர், பீஸ்ட் படங்களில் எப்படி பாடல்கள் ஹிட் அடித்ததோ, அதேபோல இந்தபடத்திற்கும் ஹிட் பாடல்களை நான் தருவேன்” என்று கூறியுள்ளார் தமன். அதுதானே ரசிகர்களுக்கும் வேண்டும்..