Home News Kollywood ஃபர்ஸ்ட் சிங்கிளுடன் பறக்க ஆரம்பித்துள்ள பட்டாம்பூச்சி

ஃபர்ஸ்ட் சிங்கிளுடன் பறக்க ஆரம்பித்துள்ள பட்டாம்பூச்சி

பெயர்தான் பட்டாம்பூச்சி என கேட்பதற்கே மிருதுவாக இருக்கிறதே தவிரா பக்கா சைக்கோ திரில்லர் படமாக உருவாகி உள்ளது சுந்தர்சி ஜெய் இருவரும் இணைந்து நடித்துள்ள பட்டாம்பூச்சி திரைப்படம்.

இந்த படத்தை இயக்குனர் பத்ரி இயக்கியுள்ளார் இந்த படம் முடிவடைந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அவ்வபோது படத்தின் போஸ்டர்களும் வெளியாகின.

சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பிரமிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து இருட்டு நெஞ்சுக்குள்ள நீரடிக்க என்கிற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது.

நவநீத் சுந்தர் என்பவர் இசையமைத்துள்ள இந்த பாடலை முகுந்தன் ராமன் எழுதியுள்ளார். இந்த பாடலை பாடகர் சிவம் பாடியுள்ளார். இந்த படத்தை அவனி டெலி மீடியா சார்பாக குஷ்பூ சுந்தர் தயாரித்துள்ளார்.