V4UMEDIA
HomeNewsKollywoodமெகா காத்திருப்புக்குப் பின் ஒரு வழியாக வெளியாகும் மஹா

மெகா காத்திருப்புக்குப் பின் ஒரு வழியாக வெளியாகும் மஹா

ஹன்சிகா நடிப்பில் நீண்டகால தயாரிப்பில் இருக்கும் படம் என்றால் அது மஹா தான். கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேலாக இந்த படம் தயாரிப்பில் இருந்து வருகிறது.

இந்த படத்தை இயக்குனர் ஜமீல் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படம் துவங்கிய சில நாட்கள் கழித்து சர்ப்ரைஸ் அறிவிப்பாக இந்தப்படத்தில் சிம்பு நடிக்கிறார் என்கிற தகவலை வெளியிட்டார்கள்.

முதலில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்று கூறியவர்கள் போகப்போக சிம்புவின் கதாபாத்திரத்தை அதிக நேரம் வரும்படியாக மாற்றி விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த படம் எப்போது ரிலீசாகும் என்பதில் ஹன்சிகாவை விட சிம்பு ரசிகர்கள் ரொம்பவே ஆவலாக எதிர்பார்த்து வந்தனர்.

இந்தநிலையில் இந்த படம் ஜூன் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது என அறிவிப்பு வெளியாகி உள்ளது. தனது 50வது படம் வெளியாகிறது என ஹன்சிகா உற்சாகத்தில் இருக்கிறாரோ இல்லையோ சிம்பு ரசிகர்கள் இந்த அறிவிப்பால் ரொம்பவே சந்தோசத்தில் இருப்பார்கள் என்பது மட்டும் உண்மை.

Most Popular

Recent Comments