லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார் என்றதுமே கமலுக்கான பாடல்கள் எப்படி இருக்கும் என்கிற ஆர்வம் இயல்பாகவே எழுந்தது.. அதிலும் பத்தல பத்தல என்கிற பாடலை அவரே எழுதி பாடுகிறார் என்றதும் நிச்சயமாக மாஸ்டர் பீஸாக அமையும் என்றே ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தார்கள்

பத்தல பத்தல என்கிற பாடல் சமீபத்தில் லிரிக் வீடியோவாகவும் சில காட்சிகளை இணைத்தும் வெளியானது..

இதற்கு முன்பு கமல் நடிப்பில் வெளியான ஆழ்வார்பேட்டை ஆளுடா என்கிற பாடலை போல இதுவும் சென்னை கானா பாணியில் இருந்தது. ஆனால் பாடல் வரிகளும், கமலின் நடன அசைவுகளும் சோசியல் மீடியாவில் பல மீம்ஸ்களை உருவாக்கி உள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க அரசியல் மற்றும் சினிமா நிகழ்வுகள் ஆகியவற்றை வான்ட்டேடாக வந்து கிண்டலடிக்கும் கஸ்தூரி, இந்த படத்தின் பாடல் வரிகள் பற்றி குறிப்பிடும்போது, “தோத் காண்டுல மொத்தத்தையும் இறக்கிட்டாப்ல” என்று கூறியுள்ளார். கமல் தேர்தல் அரசியலில் தோற்றதையும் இப்போதைய ஆளும் மத்திய அரசுக்கு எதிராக வார்த்தைகளை சேர்த்து இருப்பதையும் குறித்து தான் கஸ்தூரி இப்படி கிண்டலடித்து இருக்கிறார் என தெரிகிறது.