Home News Kollywood பத்தல பத்தல பாட்டு கமல் ரசிகர்களுக்கு பத்தியதா ? பத்தலயா ?

பத்தல பத்தல பாட்டு கமல் ரசிகர்களுக்கு பத்தியதா ? பத்தலயா ?

நீண்ட நாட்கள் கழித்து கமல் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் விக்ரம். அதைவிட இன்னும் நீண்ட நாட்கள் கழித்து கமல் தனது சொந்தக்குரலில் பாடியிருக்கிறார் என்பது இன்னும் விசேஷம். கமலின் தீவிர ரசிகனான லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கி இருப்பதால் தனது அபிமான நடிகரை பாட வைக்காமல் இருந்திருந்தால் தான் அது ஆச்சரியம்.

அந்தவகையில் கமலே இந்த பாடலை எழுதி பாடியுள்ளார். சென்னை பாஷையில் இடம்பெற்றுள்ள இந்த பாடலுக்கு அனிருத் சிறப்பாகவே இசையமைத்துள்ளார் கமலின் முக்காடு போட்டு ஆடும் நடனமும் வித்தியாசமான பாணியில் தான் இருக்கிறது

பாடல் வரிகளில் அங்கங்கே அரசியல் நையாண்டி இடம்பெற்றுள்ளன. இன்னும் சில தினங்களுக்கு அதுகுறித்த அரசியல் கட்சிகளின் சர்ச்சைகள், விவாதங்கள் மீடியாக்களில் பரபரக்கும் என எதிர்பார்க்கலாம்.

இது கமலின் அறிமுகப்பாடலா இல்லை படத்தின் நடுவே இடம்பெறும் பாடலா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. இரண்டு மூன்று முறை இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்கும்போது ரசிக்கும் விதமாக மாறுவதற்கு வாய்ப்பு உண்டு என்று சொல்லலாம்.