யோகிபாபு கதாநாயகனாக நடித்த மண்டேலா படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஷீலா ராஜ்குமார் அதற்கு முன்னதாக ஐம்பதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்ற டூ லெட் என்கிற படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். சொல்லப்போனால் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வெற்றிகரமாக என்பவர்தான் ஷீலா ராஜ்குமார் மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்துள்ளார்
இந்நிலையில் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகும் பேட்டகாளி என்கிற வெப் சீரிஸில் நடித்து வருகிறார் ஷீலா ராஜ்குமார். அண்ணனுக்கு ஜே என்ற படத்தை இயக்கிய ராஜ்குமார் என்பவர் தான் இதை இயக்கியுள்ளார்.
ஜல்லிக்கட்டு மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸ் கேட்ட காளி என்கிற ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கும் கதையின் நாயகியாக நடித்துள்ளார் ஷீலா ராஜ்குமார்