நடிகர் விஜய் முதன்முதலாக நேரடி தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் என்பது ஒரு ஆச்சரியம் என்றால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு குடும்பப்பாங்கான கதையம்சம் கொண்ட ஒரு படத்தில் நடிக்கிறார் என்பது இன்னொரு ஆச்சரியம்.

இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி ஏற்கனவே தோழா படம் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் உணர்வுபூர்வமாக கட்டிப்போட்டவர். அதனால் விஜய்யின் இந்த படத்தையும் அதேபோல நெகிழ்ச்சி தரும் விதமாக படமாக்கி விடுவார் என்பதில் சந்தேகமில்லை

அதற்கு ஏற்றவாறு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இருந்தும் பிரபல நட்சத்திரங்களாக ஒப்பந்தம் செய்து நடிக்க வைத்து வருகிறார் வம்சி.

சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஜெயசுதா இவர்கள் அனைவரும் ஏற்கனவே இந்தப்படத்தில் இணைந்துள்ள நிலையில் தற்போது நடிகர் ஷாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோரும் இந்த படத்தில் இணைந்துள்ளார்கள்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புகழ்பெற்ற மாடலிங் அழகியான சம்யுக்தாவும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
