V4UMEDIA
HomeNewsKollywoodஅக்கா குருவியைப் பார்த்து சாமியை பாராட்டிய சீமான்

அக்கா குருவியைப் பார்த்து சாமியை பாராட்டிய சீமான்

இயக்குனர் சாமியை பற்றி தெரிந்த ரசிகர்களுக்கு மட்டுமல்ல திரையுலக பிரபலங்களுக்கு ஆச்சரியமான விஷயம் தான் அவர் அக்காக் குருவி என்கிற திரைப்படத்தை இயக்கி உள்ளது. உயிர், சிந்து சமவெளி, கங்காரு என்ற சர்ச்சைக்குரிய படங்களையே இயக்கி வந்த இயக்குனர் சாமி தன் பாதையிலிருந்து முற்றிலும் மாறி இயக்கியுள்ள படம் தான் இந்த அக்கா குருவி. குழந்தைகளை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படம் ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கிய சில்ட்ரன் ஆஃப் ஹெவன் என்கிற படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தை நாம் தமிழர் கட்சித் தலைவரும் திரைப்பட இயக்குனருமான சீமான் பார்த்துவிட்டு இயக்குனர் சாமியை பாராட்டியுள்ளார்

இதுபற்றி அவர் கூறும்போது, ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கிய சில்ட்ரன் ஆஃப் ஹெவன் என்கிற படத்தை நான் ரசித்து பார்த்தவன். அதைத்தான் தமிழில் அக்காக் குருவி என இயக்கியுள்ளார் இயக்குனர் சாமி. படத்தை சும்மா பெயருக்கு ரீமேக் செய்தோம் என்று இல்லாமல் உணர்வுபூர்வமாக அழகாக இயக்கியுள்ளார். இதன் ஒரிஜினல் படம் வெறும் ஐம்பத்தி மூன்று நிமிடங்கள் தான், ஆனால் இந்தப்படம் 153 நிமிடங்கள். ஆனால் எந்த காட்சியையும் வலிந்து திணிக்காமல் கதையோடு அழகாக நகர்த்தியுள்ளார். கட்டாயம் அனைவரும் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் இது என்று பாராட்டினார்.

Most Popular

Recent Comments