சினிமாவில் 50 வருடங்களை கடந்துவிட்ட சீனியர் நடிகராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன், ஆனால் இன்னும் அவர் முன்னணி ஹீரோவாகவே நடித்து வருகிறார் என்றால், அதற்கு காரணம் மாறிவரும் விஷயங்களுக்கு ஏற்ப தன்னை அப்டேட் செய்து கொண்டே வருவது தான்.
அந்த வகையில் தற்போது கமலின் நடிப்பில் உருவாகியிருக்கும் விக்ரம் படம் பல ஆச்சரியங்களை தர இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி பஹத் பாசில் என இளம் நடிகர்களுடன் கூட்டணி வைத்தது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு தற்போது முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத்தை இசையமைக்க செய்ததும் ஒரு ஆச்சரியமான விஷயம்தான்.
தற்போது படத்தின் வேலைகள் முடிவடைந்து வரும் ஜூன் மூன்றாம் தேதி விக்ரம் படம் ரிலீஸாக இருக்கிறது இதைத்தொடர்ந்து கமல் படத்தின் வியாபாரம் மற்றும் படத்தின் விளம்பர பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் அதுமட்டுமல்ல வரும் மே 15ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழாவை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடத்த உள்ளார் இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது
அதற்கு முன்னதாக மே 11ஆம் தேதி இந்த படத்தில் பத்தல பத்தல என்கிற முதல் சிங்கிள் வெளியாக இருக்கிறது இந்த பாடலை பாடியவர் சாட்சாத் கமல்ஹாசன் தான்.. தனது இசையில் முதன்முதலாக கமல் பாடியிருப்பதால் பூரித்துப் போயிருக்கிறார் அனிருத்