நடிகர் விஜய் தற்போது முதல்முறையாக நேரடி தெலுங்கு படமொன்றில் நடித்து வருகிறார். தோழா படத்தின் மூலம் தமிழுக்கு நன்கு அறிமுகமான தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி தான் இந்த படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தில் முதன்முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் ராஷ்மிகா மந்தனா
அதேசமயம் இது தெலுங்கு படம் தானா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தமிழ் நட்சத்திரங்கள் பலர் இந்த படத்தில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் எப்போதுமே இயக்குனர் வம்சி பைடிப்பள்ளியின் படங்களில் தவறாமல் இடம்பிடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது தோழா படத்தில் நீங்களே பார்த்து இருப்பீர்கள்.
அதேபோல நடிகர் சரத்குமார் விஜய்யுடன் முதன்முறையாக இந்த படத்தில் இணைந்து நடிக்கிறார். தெலுங்கில் குறைந்த அளவிலேயே நடித்திருக்கும் சரத்குமார் இந்த படத்தின் மூலம் மீண்டும் அங்கே பிசியான நடிகராக மாறுவார் என எதிர்பார்க்கலாம்.
அடுத்ததாக தற்போது இளைய திலகம் பிரபு இந்தப் படத்தில் இணைந்துள்ளார். தெறி படத்திற்குப் பிறகு விஜய்யுடன் இவர் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் இது. தெலுங்கிலும் ஏற்கனவே பிரபு பல படங்களில் நடித்திருந்தாலும் கடந்த ஏழு வருடங்களாக அங்கே அவர் செல்லவில்லை. அந்த வகையில் அவருக்கு இது தெலுங்கில் ரீ எண்ட்ரி ஆன படமாக இருக்கும்.
இதுதவிர நடிகர்கள் ஷாம் மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நடிகை ஜெயசுதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அந்த வகையில் பிரபலமான நட்சத்திர கூட்டணியுடன் கலர்ஃபுல்லாக உருவாகி வருகிறது விஜய் நடிக்கும் முதல் தெலுங்கு படம்.