கருணாஸ் நடித்த அம்பாசமுத்திரம் அம்பானி என்ற படத்தை இயக்கியவர் ராம்நாத் பழனிகுமார். அதன்பிறகு ஜீவா நயன்தாரா நடித்த திருநாள் என்கிற படத்தை இயக்கியவர், தற்போது ஆதார் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதில் கருணாஸ், அருண்பாண்டியன், இனியா, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

எளிய மனிதர்களின் வலியை டிஜிட்டல் செல்லுலாய்டில் யதார்த்தமாக உணர்த்தியிருக்கும் படம் தான் இந்த ஆதார். ‘ஆதார் சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது

இந்தநிலையில் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து தற்போது இப்படம் தணிக்கை செய்யப்பட்டு, யு/ஏ சான்றிதழ் பெற்றிருக்கிறது. விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.