இப்போதைய இளம் முன்னணி நடிகர்களில் கிராமத்து மற்றும் நகரத்து கதாபாத்திரங்களுக்கு என இரண்டுக்குமே மிக சரியாக பொருந்தும் நடிகர் என்றால் அது கார்த்தி தான். அந்த வகையில் தற்போது கிராமத்து பின்னணியில் உருவாகி வரும் விருமன் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் கார்த்தி.

ஏற்கனவே கார்த்தியை வைத்து கொம்பன் என்கிற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் முத்தையா தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் மூலம் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ் இருவரும் இந்த படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகிறார் இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கஞ்சா பூவு கண்ணாலே என்கிற ஃபர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த பாடலில் கார்த்தியின் நடை உடை பாவனைகளை பார்க்கும்போது பருத்திவீரனில் பார்த்த கார்த்தியும், கொம்பனில் பார்த்த கார்த்தியும் சில சமயங்களில் இரண்டும் கலந்த கலவையான ஒரு புதுவிதமான ஆளாகவும் தெரிகிறார். அந்தவகையில் கிராமத்து படம் என்றாலே கார்த்திக்கு வெற்றிதான் என்பதை இந்த விருமண் படமும் நிரூபிக்கும் என நம்பலாம்.