V4UMEDIA
HomeNewsKollywoodமீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கும் சதீஷ்

மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கும் சதீஷ்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களின் எண்ணிக்கை ரொம்பவே குறைவாக இருக்கிறது. அப்படி சில காமெடி நடிகர்கள் வளர்ந்து பிரபலமாகும் சமயத்தில் அவர்களுக்கு ஹீரோவாக நடிக்கும் ஆசையை சிலர் தூண்டிவிட்டு அவர்களது பாதையையே திசை திருப்பி விடுகிறார்கள். அப்படி கதாநாயகிகளாக மாறும் ஹீரோக்கள், பெரும்பாலும் மீண்டும் காமெடி நடிகர்களாக நடிக்க முன்வருவது இல்லை. இதனால் நகைச்சுவை நடிகர்கள் பற்றாக்குறையில் தான் தமிழ் சினிமா இருக்கிறது.

அதேசமயம் யோகிபாபு கதையின் நாயகனாகவும் காமெடி நடிகராகவும் இரண்டையும் பேலன்ஸ் செய்து நடித்து வருகிறார். அவரது பாணியை தான் காமெடி நடிகர் சதீஷும் தற்போது பின்பற்ற ஆரம்பித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான நாய் சேகர் என்கிற படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தார் சதீஷ்.

அதைத் தொடர்ந்து தற்போது பெயரிடப்படாத ஒரு புதிய படத்திலும் கதாநாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக மோனிகா சின்னகொட்லா என்பவர் நடிக்கிறார். இவர் ஜீவி, தோழர் வெங்கடேஷ் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.

இந்த ஜோடியை தவிர காவல்துறை உங்கள் நண்பன் என்கிற படத்தில் நடித்த சுரேஷ் ரவி இன்னொரு கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக மானசா சவுத்ரி என்பவர் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடங்களில் கருணாகரன், ஐஸ்வர்யா தத்தா, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Most Popular

Recent Comments