மிகப்பெரிய அரசியல் பின்னணி கொண்ட படங்களை இயக்கிய மிகப்பெரிய இயக்குனர்கள் எல்லாம் எந்தவித பயமும் பந்தோபஸ்தும் இல்லாமல் ஜாலியாக வலம் வருகின்றனர். ஆனால் பிரச்சினைகளை மட்டுமே ஆவணப்படமாக இயக்கிவரும் இயக்குனர் எம்.எஸ் ராஜ் தற்போது உளவுத்துறை கண்காணிப்பில் இருப்பதாக கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான மெரினா புரட்சி என்கிற படத்தை இயக்கியவர் தான் இவர். தற்போது முத்துநகர் படுகொலை என்கிற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார்.

மெரினா புரட்சியில் மெரினா போராட்டத்தின் கடைசி நாளன்று எப்படி வன்முறை ஏற்பட்டு போராட்டம் திசை மாறியது, அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது குறித்து ஆவணப்படமாக இயக்கியிருந்தார். அதேபோல கடந்த 2018ல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் 100வது நாளில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி 13 உயிர்கள் கொல்லப்பட்ட கொடூர சம்பவத்தை மையப்படுத்தி அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது குறித்து இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தை இயக்க ஆரம்பத்திலிருந்தே இவருக்கு போலீஸ் தரப்பில் இருந்து நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருவதாக வருத்தத்துடன் கூறியுள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தை பாராளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் பார்த்துவிட்டு இதில் எந்த புனைவும் இல்லாமல் அப்படியே நடந்ததை தான் படமாக எடுத்துள்ளார். இதற்கு ஏன் போலீசார் தடை போட நினைக்கிறார்கள் என தெரியவில்லை.. நிச்சயம் இந்த படம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று” என்று கூறினார்.
அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முத்தரசன் கூட இந்த படத்தை எடுத்ததற்காக இயக்குனர் எம்.எஸ் ராஜை முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைத்து பாராட்ட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.. பார்ப்போம்.. முதலில் படத்தை ரிலீஸ் செய்ய வருகிறார்களா என்பதை