பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். மாடலிங் துறையை சேர்ந்த சம்யுக்தா. குறிப்பாக அந்த சீசனில் தனது நடவடிக்கையால் ரசிகர்களிடம் அதிக வெறுப்பை சம்பாதித்து அவர் தான்.. ஆனால் அதுவே அவருக்கு சினிமா வாய்ப்புகள் பெற்று தர ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் தற்போது குத்துக்கு பத்து என்கிற வெப்சீரிஸில் கதாநாயகியாக நடிக்கிறார் சம்யுக்தா. விஜய் வரதராஜ் என்பவர் இயக்கியுள்ள இந்த வெப்சீரிஸில் ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

நண்பனின் காதல் விவகாரம் ஒன்றில் மத்தியஸ்தம் செய்ய விரும்பி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார் இன்னொரு நண்பன். ஆனால் எதிர்பாராதவிதமாக நண்பனுக்கு அடி விழுகிறது. அதன்பிறகு நடக்கும் களேபரங்களை மையமாக வைத்து இந்த வெப்சீரிசை நகைச்சுவையாக இயக்கியுள்ளார் இயக்குனர் விஜய் வரதராஜ்.

சமீபத்தில் வெளியான இதன் டீசரில் குத்துக்கு பத்து நோ பேச்சு ஒன்லி பஞ்ச் என அடைமொழி கொடுத்துள்ளனர். விரைவில் ஆஹா ஓடிடி தளத்தில் இந்த வெப்சீரிஸ் வெளியாக இருக்கிறது.