இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் பார்ப்பதற்கு அவரே இன்னும் இளமையாக இருக்கிறார் ஆனால் இப்போது தனது மூத்த மகளுக்கு திருமணம் செய்து மாமனார் என்கிற புதிய ஸ்தானத்தை அடைந்துள்ளார். ரகுமானுக்கு அமீன் என்கிற மகனும் கதீஜா, ரஹீமா என்கிற இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் தற்போது மூத்த மகளான கதீஜாவுக்கு சவுண்ட் என்ஜினியரான ரியாஸ்தீனுக்கும் சமீபத்தில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.
திரையுலக அரசியல் பிரபலங்கள் கலந்து கோலும் விதமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியை வரும் பத்தாம் தேதி நடத்த இருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான் இந்த நிலையில் மணமக்கள் உள்ளிட்ட தனது குடும்பத்துடன் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் ஏ.ஆர்.ரகுமான் அப்போது மணமக்கள் முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர். பத்தாம் தேதி நடைபெற இருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கும் முதல்வரை வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான்