தமிழ் திரையுலகை பொறுத்தவரை ஒளிப்பதிவாளர்கள் என்றாலே பி.சி.ஸ்ரீராமுக்கு அடுத்தபடியாக சந்தோஷ் சிவன் தான் உடனடியாக ஞாபகத்துக்கு வருவார். அந்தவகையில் மணிரத்னம் படங்களில் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் சந்தோஷ் சிவன் இடையில் இயக்குனராக அவதாரம் எடுத்து அவ்வப்போது சில படங்களை இயக்கி வருகிறார்.

அந்தவகையில் தற்போது அவர் மலையாளத்தில் இயக்கியுள்ள படம்தான் ஜாக் அண்ட் ஜில். இந்த படம் தமிழில் சென்டிமீட்டர் என்கிற பெயரில் வெளியாக இருக்கிறது.

ஆச்சரியமாக இந்தப்படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, காளிதாஸ் ஜெயராம் கதையின் நாயகனாக நடிக்க, யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த காம்பினேஷனை பார்க்கும்போதே நிச்சயமாக இந்த படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைத் தரும் என்பது நன்றாக தெரிகிறது.