நடிகர் விஜய்சேதுபதி தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், அதைத்தொடர்ந்து சமீபகாலமாக இந்தி என பல மொழிகளிலும் மாறி மாறி நடித்து வருகிறார். அந்தவகையில் இந்தியில் அவர் நடிக்கும் படம் காந்தி டாக்ஸ். இந்தப் படத்தில் விஜய்சேதுபதியுடன் அரவிந்த்சாமியும் இன்னொரு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அதிதி ராவ் ஹைதரி நடிக்கிறார்.
மராத்திய இயக்குனரான கிஷோர் பாண்டுரங் பலேகர் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படம் முதலாளித்துவத்தையும் வர்க்க பேதத்தையும் மையப்படுத்தி உருவாக இருக்கிறதாம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மே 5 முதல் மும்பையில் துவங்கி நடைபெற்று வருகிறது.