தமிழில் இருந்து நடிகர்கள் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் நேரடி தெலுங்கு படங்களில் தற்போது நடிக்கத் துவங்கி உள்ளனர். ஆனால் அதற்கு முன்னதாக மகாநடி படம் மூலம் ஏற்கனவே தெலுங்கு திரையுலகில் நுழைந்து விட்டார் நடிகர் துல்கர் சல்மான். அந்த படத்தில் அவருக்கு கிடைத்த வரவேற்பு அடுத்ததாக மீண்டும் ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பை அவருக்கு வழங்கியுள்ளது.
சீதாராமம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குனர் ஹனு ராகவபுடி என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக மிருனாள் தாக்கூர் என்பவர் நடிக்க முக்கியமான வேடத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்..
இந்த படத்தில் துல்கர் சல்மான் லெப்டினன்ட் ராம் என்கிற ராணுவ வீரராக நடித்துள்ளார். எல்லை பாதுகாப்பில் இருக்கும் ராணுவ வீரனுக்கு காதல் வந்தால் எப்படி இருக்கும் என்பதை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் பெண் பூவே தேன்வண்டே என்கிற இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் மே 9 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.