பிக்பாஸ் மூலம் பிரபலமானவர்கள் தான் விஜய் டிவி ரியோ ராஜ் மற்றும் நடிகை ரம்யா பாண்டியன் இருவரும். இதில் ரியோ ராஜ், அம்மு அபிராமி நடிக்க ஏற்கனவே என்னம்மா கண்ணம்மா என்கிற ஒரு ஆல்பம் படம் வெளியானது. ரசிகர்களிடம் அந்த ஆல்பம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றதால் அதைத்தொடர்ந்து மீண்டும் ரியோ ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் இணைந்து நடிக்க தோட்டா என்கிற இசை ஆல்பத்தை தற்போது வெளியிட்டுள்ளனர்.
பிக்பாஸ் நாலாவது சீசனில் ரியோ ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் ஒன்றாக கலந்து கொண்டார்கள். அப்போது அவர்கள் எலியும் பூனையுமாக அவ்வப்போது சண்டையிட்டுக் கொள்வார்கள்.
இது பற்றி ரியோ குறிப்பிட்டு பேசும்போது, ரம்யாவும் நானும் பிக்பாஸில் சண்டை போட்டுக் கொண்டாலும் இருவருமே நண்பர்கள்.. அவர் இதில் நடித்தது மகிழ்ச்சி என்றார்.
ரம்யா பாண்டியனோ, நான் இதுவரை எந்த ஆல்பம் பாடலும் செய்ததில்லை இயக்குனர் பிரிட்டோ சொன்ன ஐடியா பிடித்திருந்ததால் உடனே ஒப்புக்கொண்டேன் என்றவர், எங்கள் நடனத்தை ஆடி இந்த பாடலை ஹிட் செய்யுங்கள் என்று ஒரு கோரிக்கையையும் வைத்தார்