கடந்த முறை நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வென்ற பாண்டவர் அணி மீண்டும் தேர்தலில் போட்டியிட்டது. அவர்களை எதிர்த்து பாக்யராஜ் தலைமையிலான அணி போட்டியிட்டது. இந்த தேர்தல் நடந்து முடிவடைந்த நிலையில் சில பல காரணங்களால் இதன் வாக்கு எண்ணிக்கை இரண்டு வருடத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு மீண்டும் நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோரின் கூட்டணியிலான பாண்டவர் அணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்று மீண்டும் பொறுப்புக்கு வந்தது.
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனை நாசர், கார்த்தி, கருணாஸ் ஆகியோர் இன்று நேரில் சந்தித்தனர்.

அப்போது நடிகர் சங்க அறக்கட்டளை அறங்காவலர் குழு உறுப்பினர் பொறுப்பு ஏற்க செயற்குழு ஒப்புதல் தரும்படி கோரிக்கை வைத்தனர் அதற்கு கமல்ஹாசனும் ஒப்புதல் அளித்து தனது சம்மதத்தை தெரிவித்துள்ளார்
