தமிழகத்தில் உள்ள சாய்பாபா பக்தர்கள் அனைவருக்கும் ஷீரடி சென்று சாய்பாபா கோவிலில் வழிபட்டு வர வேண்டுமென நீண்ட நாள் ஆசை இருக்கும். பலருக்கும் அங்கே சென்றுவர சரியான போக்குவரத்து வசதி அமையாததால் அந்த ஆசையை கூட நிறைவேற்ற முடியாமல் தள்ளிப்போட்டுக்கொண்டு வந்திருப்பார்கள் அப்படிப்பட்டவர்களுக்கு வரப்பிரசாதமாக கோவையில் இருந்து சீரடி செல்வதற்காக புதிய ரயில் ஒன்று துவங்கப்பட்டுள்ளது.
இந்த சேவையை மக்களிடத்தில் எளிதில் கொண்டு செல்வதற்காக ஒரு விளம்பர படமும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பர படத்தில் நடிகை ஜனனி ஐயர் நடித்துள்ளார். இந்த ரயில் சேவை துவக்கப்படுவதை முன்னிட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் நடிகை ஜனனி ஐயர் கலந்துகொண்டு பேசும்போது, “இந்த அனுபவத்தைப் பற்றி என் வார்த்தைகளை எப்படி வெளிப்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை.. கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்விக்கு சில அதிசயங்கள் நடந்தால் தான் பதில் கிடைக்கிறது.
நான் 10 நாட்களுக்கு முன் தான் சாய்பாபாவை பற்றிய ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தேன். திடீரென தர்மா போன் செய்து ஷீரடி ரயில் ஒன்றிற்கு விளம்பரப்படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது என்றார். எனக்கு இப்போது அதை சொல்லும்போது கூட புல்லரிகின்றது
சாயிபாபாவின் இருப்பை உணர்ந்தேன். அதனால் தான் இந்த விளம்பரப்படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்துள்ளது. நானும் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டேன்.
இந்த ரயிலில் அனைத்து சிறப்பு வசதிகளும் உள்ளன. நானும் இந்த ரயிலில் பயணம் செய்து ஷீரடி செல்ல வேண்டும் என ஆசை கொள்கிறேன். அது நடக்கிறதா என்று பார்ப்போம். நீங்களும் இந்த ரயிலில் பயணம் செய்து அனைத்து வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். என்னை இங்கு அழைத்ததற்கு நன்றி” என்றார்