இந்த வாரமே பயணிகள் கவனிக்கவும் மற்றும் ஹாஸ்டல் என இரண்டு மலையாள ரீமேக் படங்கள் வெளியாகியுள்ளன.. இதை தொடர்ந்து அந்த அந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள படம் விசித்திரன். கடந்த 2018-ல் மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான ஜோசப் என்கிற படம் தான் தற்போது தமிழில் விசித்திரன் என்கிற பெயரில் ரீமேக்காகி உள்ளது.

மலையாளத்தில் கதையின் நாயகனாக குணச்சித்திர நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நடித்திருந்த கதாபாத்திரத்தில், தமிழில் ஆர்கே சுரேஷ் நடித்துள்ளார்.. ஆர்கே சுரேஷின் மனைவியாக பூர்ணா நடித்துள்ளார். மலையாளத்தில் இந்தப்படத்தை இயக்கிய பத்மகுமார் தான் தமிழிலும் இயக்கியுள்ளார்.

இயக்குனர் பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, இயக்குனர் ஜான் மகேந்திரன் வசனம் எழுதியுள்ளார். இந்தநிலையில் இந்தப்படம் வரும் மே-6ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.