கடந்த சில வருடங்களுக்கு முன் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு படம், வழக்கமான பேய் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு பாசிட்டிவாக எடுக்கப்பட்டிருந்தது. ரசிகர்களிடம் வரவேற்பையும் பெற்றது. பிசாசுவாக பிரயாகா மார்ட்டின் நடித்திருந்தார்.
இந்நிலையில் பிசாசு-2 படத்தையும் இயக்க ஆரம்பித்து படத்தை முடித்தும் விட்டார் மிஸ்கின். இந்தப்படத்தில் கதாநாயகனாக விஜய்சேதுபதி நடிக்க, .கதாநாயகிகளாக ஆண்ட்ரியா மற்றும் பூர்ணா ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்தநிலையில் இன்று பிசாசு படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. ஹாரர் படங்களுக்கே உரிய த்ரில்லிங் அம்சங்கள் இருந்தாலும் அதையும் தாண்டி இதில் ஏதோ வித்தியாசமாக இருப்பதையும் உணர முடிந்தது. படம் நிச்சயம் மிரட்டலாக இருக்கும் என்பதை டீசரே சொல்லாமல் சொல்கிறது.