விரைவில் வர இருக்கும் ரமலான் பண்டிகைக்காக இஸ்லாமியர்கள் தொடர்ந்து நோன்பு இருந்து வருகிறார்கள் இந்த சமயத்தில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாகவும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு அடையாளமாகவும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களும் இஸ்லாமியர்கள் அளிக்கும் இப்தார் விருந்தில் பங்கேற்று அவர்களை கௌரவித்து வருகின்றனர்.

பெரும்பாலும் அரசியல்வாதிகள் இந்த இப்தார் விருந்தில் கலந்து கொள்வது நாம் அறிந்தது தான். அதேசமயம் இளம் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் ஹரிஷ் கல்யாண், ரமலான் நோன்பின் இருபத்தி ஏழாவது நாளான இன்று பள்ளிவாசலுக்கு சென்று வழிபட்டுள்ளார்.

மேலும் அங்கே அவர்களுடன் இணைந்து நோன்பு கஞ்சியும் பருகினார் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அவரது இந்த செயல் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.