சிபிராஜ் நடிப்பில் அடுத்ததாக மாயோன் என்கிற படம் ஜூன் 17ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு சிபிராஜ் நடிப்பில் உருவான ரங்கா என்ற திரைப்படம் சில காரணங்களால் பலமுறை ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டு கொண்டு வந்தது.

இந்த நிலையில் ஒரு வழியாக இந்தப் படம் வரும் மே 13ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

நிகிலா விமல் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தை வினோத் என்பவர் இயக்கியுள்ளார். ராம் ஜீவன் ராமன் என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
நீண்ட நாட்கள் கழித்து இந்தப்படம் வெளியாக இருப்பதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் தங்களுடைய ஆதரவை தர வேண்டும் என்று சிபிராஜ் ஒரு கோரிக்கையும் விடுத்துள்ளார்.