காஞ்சனா 3 படத்தை தொடர்ந்து லாரன்ஸ் நடித்த படம் வெளியாகி நீண்ட காலம் ஆகிவிட்டது. இந்த நிலையில் அவர் நடிக்க உள்ள அதிகாரம் திரைப்படம் வெகுவிரைவில் துவங்க இருக்கிறது.

எதிர்நீச்சல், கொடி போன்ற வெற்றி படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறனும் தயாரிப்பாளர் ஆடுகளம் கதிரேசனும் இணைந்து தயாரிக்க உள்ளனர்.

ஏற்கனவே இந்த கூட்டணியில் அதிகாரம் படம் உருவாக போவதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் வெற்றிமாறனும் ஆடுகளம் கதிரேசனும்.